வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Report Print Theesan in சமூகம்
87Shares

இலங்கையில் செயற்படும் ஒரே ஒரு 24 மணி நேர தமிழ் மொழி மூல பொலிஸ் அவசர சேவை இயங்கி கொண்டிருப்பதாகவும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும், இரகசியம் பேணப்படும் எனவும் வன்னி பிரதிப்பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

வன்னி பிரதிபொலிஸ்மா அதிபரால் நேற்றையதினம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்திலே இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துண்டு பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தகவல்கள், சட்டவிரோதமான மதுபானம்,போதைவஸ்து தொடர்பான தகவல்கள், தேசிய பாதுகாப்பிற்கு பாதகம் விளைவிக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள், வன அழிப்பு, மண் அகழ்வு, வனவிலங்கு அழிப்பு போன்ற ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் கூடிய தகவல்கள், தேசிய மரபுரிமைக்கு சொந்தமான உடமைகள் அழித்தல் தொடர்பான தகவல்கள், விபத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான தகவல்கள், பொலிஸ் சேவை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சட்டவிரோத பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான தகவல்கள் எவ்விதமான குற்ற செயல்களாயினும் அவற்றை எங்களுக்கு 076 622 4949 , 076 622 6363 போன்ற இலக்கத்திற்கு எமக்கு முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்.

அவ்விடயங்களில் உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் தகவல்கள் ,இரகசிய தன்மையும் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.