வவுனியாவில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது

Report Print Theesan in சமூகம்
70Shares

வவுனியா நகரிலிருந்து மாமடு நோக்கி கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயினை கடத்திச் சென்றவர்களை மடுகந்தை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மடுகந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா - மாமடு செல்லும் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைசாவடியில் மாமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து 2 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் 3 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் பூந்தோட்டம், றம்பைக்குளம் பகுதியை சேர்ந்த 26, 36 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.