உயிரிழந்த இலங்கை பணிப்பெண் தொடர்பில் குவைத் தம்பதியினரிடம் விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்
80Shares

சித்திரவதை செய்யப்பட்ட உயிரிழந்த 46 அகவையைக் கொண்ட இலங்கை பணிப்பெண் தொடர்பில் குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உடலில் தீக்காயங்கள், வெட்டுக்கள் இருந்ததற்கான தடயங்களுடன் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில மணிநேரத்தில் அங்கு உயிரிழந்தார்.

அவரது உடல், முழுமையான அறிக்கைக்காக தடயவியல் துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

குவைத்தில் ஒரு இலங்கையின் பணிப்பெண் சித்திரவதைகள் காரணமாக உயிரிழந்தது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டின் ஆரம்பத்திலும் ஒரு பிலிப்பைன்ஸ் பணிப்பெண் அவர் பணிபுரிந்த வீட்டாரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.