தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியோடியவர் மன்னாரில் வைத்து கைது

Report Print Ashik in சமூகம்
123Shares

வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய நபர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு பெரியகாடு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கட்டார் நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித்த றுவான் குணவர்த்தன என்ற 36 வயதுடைய நபர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு குறித்த தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று மாலை 6.30 மணியளவில் மன்னார் - சௌத்பார் புகையிரத நிலைய பகுதியில் வைத்து சௌத்பார் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மீண்டும் வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.