கொழும்பில் பல பகுதிகளுக்கும் இன்று இரவு முதல் 12 மணி நேர நீர்வெட்டு!

Report Print Ajith Ajith in சமூகம்
80Shares

கொழும்பில் இன்று இரவு 10 மணிமுதல் 12மணிநேர நீர் விநியோகத்தடை நடைமுறைக்கு வருகிறது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 9, 10,11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகிறது.

நீர்வழங்கல் திட்டத்தில் மேம்படுத்தல் காரணமாகவே இந்த தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.