கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் மீட்பு! இருவர் கைது

Report Print Ashik in சமூகம்
160Shares

அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் இன்று மாலை மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சியின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த மதுபான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னார் முருங்கன் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மன்னார் சௌத்பார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே இன்று மாலை மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

பார ஊர்தி ஒன்றினுள் முழுமையாக சுற்றி பியர் போத்தல்கள் அடுக்கி வைத்து சூட்சுமமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி 750 மில்லி லீட்டர் கொண்ட 660 மதுபான போத்தல்கள் கொண்டு வந்த போதே மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு.

அனுராதபுரத்தை சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு, பார ஊர்தி மற்றும் கைப்பற்றப்பட்ட சட்ட விரோத மது பான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.