கொச்சிக்கடையில் பேஸ்புக் விருந்து! இளம் யுவதிகள் உட்பட 30 பேர் கைது

Report Print Vethu Vethu in சமூகம்
453Shares

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் பேஸ்புக் விருந்து ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கம்மல்தோட்டை நிகழ்வு மண்டபத்தில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து ஒன்றே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது இளைஞர், யுவதிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் கேரளா கஞ்சா இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.