வவுனியா - செட்டிக்குளம் பிரதேச சபைக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் காட்டு யானைகளினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்தினுள் நேற்று இரவு ஐந்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்து ஒரு ஏக்கர் அளவிலான பயன்தரு மரங்களான தென்னை மரங்கள், வாழை மரங்களை சேதமாக்கியுள்ளன.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இம்மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக காட்டு யானைகளின் தாக்குதலால் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இப்பிரச்சினை காரணமாக யானை வேலியினை அமைத்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.