சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வவுனியா மாவட்ட தலைமை அலுவலகம் திறந்து வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்
32Shares

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற ரியத் அட்மிரல் சரத் வீரசேகரவால் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டடுள்ளது.

சிவில் பாதுகாப்பு பிரிவினரின் சேவைகளை விஸ்தரித்து அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள வவுனியா அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் சிவில் பாதுகாப்பு திணைக்கள வவுனியா வலய கட்டளை அதிகாரி ருவான் மிலாவான், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.