நாய்க்குட்டியினால் ஏற்பட்ட விபரீதம்! ஒருவர் உயிரிழப்பு

Report Print Kanmani in சமூகம்
501Shares

கண்டி- தெல்தொடவத்த பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்டுள்ள நாய்க்குட்டியினால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட நாய்க் குட்டியொன்று கடந்த 10ஆம் திகதி பிறிதொரு நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளது.

பின்னர் நாய்க்குட்டி தொடர்பில் தகவலறிந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.

இருவருக்கிடையிலான மோதலில் நாய்க்குட்டியின் உரிமையாளர் மேற்கொண்ட தாக்குதலில் மற்றைய நபர் பலத்த காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாய்க்குட்டியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.