பொலன்னறுவையிலிருந்து தென்மாகாணத்திற்கு துப்பாக்கிகளை கடத்திய இருவர் கைது

Report Print Banu in சமூகம்
63Shares

தென்மாகாணத்திலுள்ள பாதாள உலகக்குழுவொன்றிற்கு பொலன்னறுவையிலிருந்து ஆயுதங்களை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திஸ்ஸமஹரம மற்றும் கொஹுவல பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிகளை தென்னிலங்கையில் செயற்படும் பாதாள உலகக்குழு குற்றவாளி கொழும்புக்கு வழங்குவதற்காக குறித்த இருவரும் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.