கொரோனா வைரஸ் பரவலை அடுத்து ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்தை வழங்குமாறு நடைமுறைப்படுத்திய சட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்குமாறு நிறுவனங்களின் பிரதானிகள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் நிறுவனங்களின் பிரதானிகள் விடுத்த இந்த கோரிக்கையை தொழில் அமைச்சர் நிராகரித்துள்ளார்.
நிறுவனங்களின் பிரதானிகளுக்கு செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே இந்த சலுகை வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே போக்குவரத்து வசதிகள் மற்றும் மேலதிக பணி நேர கொடுப்பனவை வழங்காமை, ஊழியர் வருகையை வேண்டும் என்ற குறைப்பது சம்பந்தமாக 50 நிறுவனங்கள் குறித்து தொழில் அமைச்சருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்பில் அமைச்சர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த முறைப்பாடு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமைக்காக காரணத்தை விளக்கி அறிக்கை ஒன்றை வழங்குமாறு தொழில் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.