வெளிநாட்டு தொழிலாளர்களாக எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பெண்களின் வயது வரம்பு தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் பெண்களின் வயதை மாற்றி வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பி வைக்கும் சில சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் இப்படியான சம்பவம் தொடர்பான விசேட விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.