இலங்கையில் சற்றுமுன்னர் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை

Report Print Kanmani in சமூகம்
755Shares

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3204 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 3195 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 08 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

மற்றைய நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 13 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் இதுவரை இந்த தொற்றினால் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.