மன்னார் இந்துக் குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழுச்சி மாநாடும், இந்துக் குருமார் பேரவையின் 25 ஆவது ஆண்டு விழாவும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மன்னார் இந்துக் குருமார் பேரவையின் தலைவர் மனோ ஐங்கர சர்மா தலைமையில் மன்னார் நகர மணடபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மன்னார் நகர மண்டபம் வரை அமைதியான முறையில் ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊர்வலத்தில் இந்து குருமார்கள்,இந்து மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது நந்திக்கொடியை ஏந்தியவாறு மன்னார் நகர மண்டபம் வரை ஊர்வலமாக சென்றுள்ளனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருனாநந்த குருக்கள், கொழும்பு சிறி பத்திரகாலியம்மன் ஆலய பிரதம குரு குமன் குருக்கள், சிவசேன அமைப்பின் தலைவர் மரவன் புலவு சச்சிதானந்தன், இந்து மத குருக்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள்,பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.