ரூபா 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!- பணம் மற்றும் இரு வாகனங்கள் மீட்பு

Report Print Rakesh in சமூகம்
73Shares

புத்தளம் நகரில் 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஒருதொகை பணம் என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று அதிகாலை புத்தளம் நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 75 கிராம ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்யப்பட்ட 2 இலட்சத்து 62 ஆயிரம் ரூபா பணமும், வாடகைக்கு பெறப்பட்ட கார் உட்பட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.