யாழ்ப்பாணம் - பொம்மைவெளிப் பகுதியில் வசிக்கும் முஸ்லீம் மக்கள் தாம் வெள்ளத்தில் வாழ்வதாகவும், தமக்கு வீடு கட்டித் தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகளின்றி வாழும் தமக்கு, மழை காலத்திலும், வெய்யில் காலத்திலும் தாம் பல இன்னல்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் உடைக்கப்பட்ட வீடுகள் எங்கே? மகிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித் தரமாட்டீர்களா? எம்மை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.