நாடு திரும்ப முடியாமல் சோமாலியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்
42Shares

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நிலைமை காரணமாக சோமாலியாவின் தலைநகர் மோகடிசு நகரில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இலங்கையை சேர்ந்த 13 பேர் கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் எதுமின்றி மேகாடிசு நகரில் தங்கியுள்ளனர்.

சோமாலியாவில் இலங்கை தூதரகம் இல்லாத காரணத்தினால், அவர்கள் தமது நிலைமை சம்பந்தமாக எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.

தொழில் நிமித்தம் சோமாலியா சென்றிருந்த இந்த இலங்கையர்கள் சம்பளமின்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தம்மை இலங்கைக்கு வரவழைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.