பத்தனையில் பேருந்துக்காக காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி! ஏழு பேர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
124Shares

நுவரெலியா - ஹட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இன்று பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும், பேருந்துக்காக தரிப்பிடத்தில் காத்திருந்த நால்வருமே காயமடைந்த நிலையில் சிகிச்கைகளுக்காக கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து தரிப்பிடத்தில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவ்வேளையில் பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரும், பெண்ணொருவரும் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். இவ்விபத்தால் பேருந்து தரிப்பிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.