ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
106Shares

சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் உட்பட மூன்று பெண்களை இன்று மாளிகாவத்தை பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களான பெண்களிடம் இருந்து 90 கிராம் ஹெரோயின், 4 கிலோ கிராம் மாவா, 29 பக்கெட் கேரளா கஞ்சா ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மாளிகாவத்தை பிரதீபா மாவத்தையில் 80 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் பிரதான சந்தேக நபரான மாளிகாவத்தே சீலவதியை ஹெரோயின், கஞ்சா மற்றும் மாவா ஆகியவற்றுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.