வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 11 பேருக்கு விளக்கமறியல்

Report Print Gokulan Gokulan in சமூகம்
108Shares

மட்டக்களப்பு - வாழைச்சேனை, பொத்தானை வயல் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நேற்றையதினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான நேற்று அதிகாலை குறித்த வயல் பிரதேசத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட அலவாங்கு, மண்வெட்டி மற்றும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவர்களை வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.