யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று மாலை இடம்பெற்ற இத்தாக்குதலில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஆங்கில ஆசிரியர் ஒருவர்மீதே மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.