ஹட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்

Report Print Thirumal Thirumal in சமூகம்
89Shares

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் ஹட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் நகரப்பகுதியில் நிலவும் குறைப்பாடுகளையும் மக்கள், நகரசபை அதிகாரிகள் ஊடாக கேட்டறிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை கூடிய விரைவில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சராக கடமையேற்ற பின் கண்காணிப்பு மற்றும் களப்பயணங்களை மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வுகளை முன்வைத்து வரும் ஜீவன் தொண்டமான் இதன் ஓர் அங்கமாக ஹட்டன் நகருக்கு சென்றுள்ளார்.

இதன்போது மக்கள் மற்றும் வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக ஞாயிறு சந்தைத்தொகுதி கட்டடத்தொகுதிக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், அங்கு நிலவும் குறைப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதறகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

அதேபோல ஞாயிறு சந்தைத்தொகுதி மற்றும் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திலுள்ள பொது மலசலக்கூடங்களை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு நகரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.