வெளிநாடு ஒன்றில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Vethu Vethu in சமூகம்
501Shares

சோமாலியா - மொகடிஷு நகரில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் கொரோனா வைரஸ் காரணமாக கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 இலங்கையர்கள் 6 மாதங்களாக சம்பளமின்றி அங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சோமாலியாவில் இலங்கை தூதரக அலுவலகம் இல்லாமையினால் அவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் எத்தியோப்பியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித வருமானம் இன்றி கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள தம்மை நாட்டுக்கு அழைத்து செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.