செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்
1131Shares

செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகள் தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

செயற்கை முட்டைகள் என சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து பொதுமக்கள் உடனடியாக அறிவிக்க வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.