வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்
86Shares

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அண்மைகாலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்தில் கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றையதினம் வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவபுளியங்குளம் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, அதிக சத்தமுடைய ஹோர்ன் எழுப்பியமை, வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சாரதிகளுக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளிற்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக தெளிவூட்டல்களையும் பொலிஸார் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.