வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது மாணவன் பலி

Report Print Theesan in சமூகம்
503Shares

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது மாணவரொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஈச்சங்குளம் பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியில் குறித்த மாணவர் பயணித்து கொண்டிருந்த போது அதே பாதையில் சென்ற மோட்டர்சைக்கிள் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 15 வயதுடைய எழில்ராசா புவிதரன் என்ற புதுக்குளம் மகாவித்தியாலய மாணவரே உயிரிழந்துள்ளதுடன், மோட்டர்சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

மூன்று மோட்டர்சைக்கிள்கள் சமாந்தரமாக சென்றமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டர்சைக்கிள் தவிர ஏனை இரு மோட்டர்சைக்கிள்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.