மேல் மாகாணத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவோர் தங்கியிருக்கும் இடங்களில் தேடுதல்

Report Print Ajith Ajith in சமூகம்
158Shares

மேல் மாகாணத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவோர் தங்கியிருக்கும் இடங்களில் நேற்று காலை விசேட தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கட்டட ஒப்பந்தக்காரர்கள் தம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதைப்பொருட்களை வழங்குவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹெரோய்ன், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் என்பனவற்றை வைத்திருந்த 48 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதலின் போது 6500 தொழிலாளர்களின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் தொழிலில் அதிக நன்மையை பெறும் நோக்கில் தொழிலாளர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.