சுற்றுலா மற்றும் விமானப்பயண அமைச்சின் அதிகாரிகள் திருகோணமலைக்கு விஜயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
97Shares

திருகோணமலையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காகவும், S4IGயினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காகவும் சுற்றுலா மற்றும் விமானப்பயண அமைச்சின் அதிகாரிகள் இன்று திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது S4IG இனால் தயாரித்து வழங்கப்பட்ட சுற்றுலா தகவல் மையம் அமைப்பது தொடர்பான இடஆய்வு இடம்பெற்றதுடன், அகம் நிறுவனத்தினால் S4IGயின் நிதி பங்களிப்புடன் இடம்பெறும் சமூக மட்ட சுற்றுலா குழுக்களையும் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் குச்சவெளி பிரதேதசத்தில் சுற்றுலா அமைச்சு சொந்தமான காணிகளில் இடம்பெறும் அபிவிருத்தியையும் பார்வையிட்டுள்ளனர்.

இக்குழுவில் இலங்கை சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி மற்றும் அதிகாரிகள் உடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்தா பி.வன்னியசிங்க, கிழக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர் ஹரி மற்றும் முகாமையாளர் ஞானசேகரன் மற்றும் S4IG மாவட்ட முகாமையாளர் எம்.மதியழக,ன் அகம் நிறுவன இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.