கண்டியில் தற்கொலை செய்த இளம் யுவதியை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த 15 சாரதிகள்

Report Print Vethu Vethu in சமூகம்
2714Shares

கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தி இளம் பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பதை 15 சாரதிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

குறித்த சாரதிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி இந்த இளம் பெண் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தக் கொண்டுள்ளார். இதன் போது 300 பேர் வரையில் அவ்விடதில் கூடி இளம் பெண் உயிரிழப்பதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.

பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த சாரதிகள் வாகனத்தை பாலத்தில் நிறுத்தி விட்டு வீடியோ எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You may like this video...