கல்குடாப் பகுதியிலுள்ள சிங்கள கிராமங்களை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை

Report Print Kumar in சமூகம்
83Shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பகுதியில் உள்ள சிங்கள மக்கள் வாழும் கிராமங்களை அரசாங்கம் கவனத்தில் கொண்டு அவற்றினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபே ஜனபல கட்சியின் தேசிய அமைப்பாளர் அசேல தர்மசிறி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கல்குடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நமக்குத் தெரியும் தற்போது உள்ள ஜனாதிபதி அபிவிருத்தி என்னும் தொனியில் பல வேலை திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிங்களவர்கள் வாழ்கின்ற சில கிராமங்கள் இருக்கின்றன. இருந்த போதிலும் இந்த மக்களுக்கு அரசு அதிகாரிகளாலும் அரச சார்பற்ற நிறுவனங்களால் உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

1990ஆம் ஆண்டு இவர்கள் இடம்பெயர்ந்ததிலிருந்து எந்தவித உதவி திட்டங்களும் வழங்கப்படவில்லை. குறிப்பாக இவ்வாறு இடம் பெயர்ந்து வந்தவர்களுக்கு அரசியல்வாதிகள் கூட எந்தவிதமான உதவிகளும் செய்யாமல் இருக்கின்றார்கள்.

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக குறித்த கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டுகளில் இவர்கள் இடம்பெயர்ந்துள்ளமை அறியமுடிகின்றது.

ஆனால் அவர்கள் இன்று மீண்டும் இங்கு வந்து வாழ்வதற்கு விரும்புகின்றார்கள் இருந்தாலும் இவர்களுக்கு எவராலும் எந்தவிதமான உதவி திட்டங்களும் வழங்கப்படுவதில்லை .

வரலாற்றில் 30 வருடங்கள் யுத்தம் இருந்தபோதிலும் மிகவும் விசேடமான மாவட்டமாக தான் கிழக்கு மாகாணம் இருக்கின்றது .

குறிப்பாக இன்றைய ஊடக சந்திப்பு மேற்கொள்வதற்கான காரணம் மட்டக்களப்பு மாவட்டம் என்பது ஒரு பெறுமதி பணம் விளையும் பூமியாக தான் பார்க்கின்றேன். அதுவுமின்றி சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டை ஒத்த ஒரு இடமாகத்தான் மட்டக்களப்பு இருக்கின்றது .

வாவிகள் கடல் மண் வளம் இதுபோன்று பலவற்றைக் கூறலாம் சுற்றுலா மையமாகவும் பார்க்கப்படுகின்றது. நமக்குத் தெரியும் தற்போது உள்ள ஜனாதிபதி அபிவிருத்தி என்னும் தொனியில் பல வேலை திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

உண்மையில் நான் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வந்த போது என்னுடன் இளைஞர்கள்,யுவதிகள் எல்லோரும் கை கோர்த்து எதிர்காலத்தை முன்னோக்கி செல்வதற்காக என்னுடன் இணைந்து இருக்கின்றார்கள் .

அதை நினைத்து நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன் இன்னொரு விடயத்தை சொல்ல வேண்டும் உண்மையிலேயே இந்த மாவட்டத்தில் யுத்தத்தை முன்னெடுத்த அவர்கள் இன்று தூக்க நிலையில்தான் காணப்படுகின்றார்கள் என்று கூறியுள்ளார்.