தற்கொலைக்கு முயன்ற சிறுமியால் வவுனியா வைத்தியசாலையில் குழப்பநிலை

Report Print Theesan in சமூகம்
118Shares

வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் நேற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த சிறுமி வைத்தியசாலையின் இரண்டாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே குதிக்க போவதாக தெரிவித்த நிலையில், விரைந்து செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மாடிக்கட்டடத்தில் ஏறி சிறுமியை மீட்டிருந்தனர்.

ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்ததுடன், காதல் விவகாரத்தினாலேயே தான் தற்கொலைக்கு முயன்றதாக அங்கிருந்தவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தால் வவுனியா வைத்தியசாலையில் சற்றுநேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.