புத்தளம் மாவட்டம் ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் வீட்டுக்கு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானங்கள் அடங்கிய போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பிரதேச அரசியல்வாதியின் வீட்டுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கசிப்பு போத்தல்களை தாம் கைப்பற்றியதாக சிலாபம் பிராந்திய மோசடி தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனவிழுந்தாவ பறவைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியை அழித்த சம்பவம் தொடர்பாக இந்த முன்னாள் பிரதேச சபை தலைவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவரான ஜகத் சமந்தகே, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.