வவுனியாவில் அதிகரித்து வரும் சிறுநீரக தொற்றாளர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்
79Shares

வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வாழும் மக்கள் பெருமளவில் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபர தகவல்களின்படி 2 ஆயிரத்து 901 பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு பாதிப்படைந்தவர்களில் பெருமளவானோர் வறுமைக்கோட்டுக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நோயால் பாதிக்கப்பட்ட 2901 பேரில் 2751 பேருக்கு மட்டுமே அரசினால் மாதாந்த உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும்,ஏனையவர்களான 150 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் எனவும் மாவட்ட செயலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் அதிகளவிலான மக்கள் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாவது அந்த மாவட்டத்தின் நீர் தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய உடனடித்தேவை உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.