சிறைச்சாலையில் உயிரிழந்த பிக்கு

Report Print Steephen Steephen in சமூகம்
182Shares

11 வயதான இளம் பௌத்த பிக்குவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

நெபோட இயல குடலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த 43 வயதான பிக்குவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபையினருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட அந்த பிக்கு மத்துகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சிறைச்சாலையின் தனிமைப்படுத்தப்பட்ட எப். பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தேரர் உயிரிழந்துள்ளார்.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பௌத்த பிக்கு மருத்துவச் சிகிச்சைக்காக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பிக்குவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளை களுத்துறை பதில் நீதவான் சைமலி யாப்பா மேற்கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைகள் களுத்துறை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.