வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு இடம் ஒதுக்காது நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Report Print Theesan in சமூகம்
57Shares

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு . திலீபன் தலைமை தாங்கி கூட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

வவுனியா பிரதேசத்தில் கடமையாற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் அரச ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , வினோநோதாரலிங்கம் , காதர் மஸ்தான் , முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முத்துமுகம்மது ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் து.நடராயசிங்கம், நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டபோதும் செய்தி சேகரிப்பதற்கு சென்ற பிரதேச செய்தியாளர்களுக்கு பிரத்தியேகமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கு என இடம் ஒதுக்கப்பட்டபோதும் வவுனியா பிரதேச செயலாளரால் இம்முறை இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இட நெருக்கடிக்கு மத்தியில் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.