12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Report Print Steephen Steephen in சமூகம்
175Shares

12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று தமக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஊடகங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவுக்கும் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவரை தவிர மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள், மற்றும் அரச சிரேஷ்ட சட்டத்தரணிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் விபரம்.

திரு டப்ளியூ.ஏ. பெரேரா - மாவட்ட நீதிபதி

திருமதி சீ. மீகொட- மாவட்ட நீதிபதி

செல்வி ஏ.ஐ.கே.ரணவீர - மாவட்ட நீதிபதி

செல்வி கே.எஸ். லங்கா ஜயரத்ன- பிரதான நீதவான்

திரு ஆர்.எஸ்.ஏ. திஸாநாயக்க - நீதவான்

திரு டப்ளியூ.எம்.எம். தல்கொடபிட்டிய - மாவட்ட நீதிபதி

செல்வி டி.டப்ளியூ. டப்ளியூ.எம்.ஆர்.சீ.பீ. குமாரி தேல- மாவட்ட நீதிபதி

திரு எஸ்.எஸ். பொன்னம்பெரும- மாவட்ட நீதிபதி

செல்வி எஸ்.ஐ. நாகலிங்கவங்ச - மேலதிக நீதவான்

திரு டி.ஏ.ஆர். பத்திரன - நீதவான்

திருமதி என்.டி.விக்ரமசேகர - சிரேஷ்ட அரச சட்டத்தரணி

திருமதி ஏ.ஜீ.யு.எஸ்.என்.கே. செனவிரத்ன - சிரேஷ்ட அரச சட்டத்தரணி