போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Report Print Rakesh in சமூகம்
44Shares

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் 13 பேருக்கும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினை விற்றமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் குறித்த பணியகத்தின் 13 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று முற்பகல் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.