பதுளை மாவட்ட மதஸ்தலங்களுக்குச் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநர்

Report Print Thirumal Thirumal in சமூகம்
57Shares

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், பதுளை மாவட்டத்தில் உள்ள மதஸ்தானங்களுக்குச் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில் பதுளை முதியங்கான ரஜமகா விகாரைக்கு சென்ற ஆளுநர் முஸம்மில் விகாரைக்கு பொறுப்பான மலகல சந்திம தேரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்.

அதன் பின்னர் ரிதீபான ஸ்ரீ பேச்சியம்மன் கோவிலுக்குச் சென்று ஆர்.சி. சாமி குருக்களை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பதுளை புனித மரியா தேவாலயத்துக்குச் சென்று, தேவாலயத்துக்கு பொறுப்பான அருட்தந்தை பிரியந்தவைச் சந்தித்துள்ளார்.

இறுதியாக பதுளை பிரதான ஜூம்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஆளுநரை வரவேற்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.