கஞ்சாவை பயிரிட்டால் பொருளாதார இலாபங்களை பெற முடியும்: சிரேஷ்ட விரிவுரையாளர்

Report Print Steephen Steephen in சமூகம்
86Shares

கஞ்சாவை பயிரிட்டால் பொருளாதார ரீதியான இலாபங்களை பெற முடியும் என தேசிய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நிமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவ ஒன்றியம் கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மூன்று உலகங்களையும் வெற்றிக்கொள்ளும் மருந்து என்ற பெயர் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படும் பெயர். கஞ்சாவை தவறாக பயன்படுத்துவதன் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

கஞ்சாவை நாம் பயன்படுத்தும் சில முறைகள் இருக்கின்றன. கஞ்சாவை புகையாக பயன்படுத்துக்கின்றனர். கஞ்சாவை உணவாக உட்கொள்வது தவறான பயன்பாடு அல்ல.

அதனை உணவாக உட்கொள்ளும் போது அது நீண்ட நாட்கள் உடலில் இருக்கும். ஒரு மாதத்திற்கு பின்னர் உடலில் கஞ்சா இருக்கின்றதா என்பதை சிறு நீரை பரிசோதனை செய்வதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

கஞ்சாவை போதைப் பொருளாக அடையாளப்படுத்தவில்லை. கஞ்சாவை மருந்தாக பயன்படுத்தினால் அது மிகப் பெறுமதியான மருந்து.

உதாரணமாக நாம் “ புத்தராஜ கல்பத்தை” சிறு குழந்தைகளுக்கு கொடுக்கின்றோம்.அதில் கஞ்சா, அபின் ஆகிய இரண்டு பொருட்களும் அடங்கியுள்ளன.

அவை சேர்க்கப்பட்டாலேயே மருந்துகளில் குணம் இருக்கும். இதனால் தேசிய மருத்துவர்களுக்கு அவற்றை பயன்படுத்த இடமளியுங்கள்.

1964 இலக்கம் 13 சட்டத்திருத்திற்கு அமைய இவற்றின் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தி இருந்தாலும் அவற்றை பயன்படுத்தும் சந்தர்ப்பம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் நிமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.