கொழும்பிலுள்ள ஹோட்டல்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in சமூகம்
696Shares

இலங்கையில் பாதாள உலக குழுவினர் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் குறித்த குழுவினர் பாதுகாப்பு வீடாக கொழும்பு ஹோட்டல்களை பயன்படுத்திக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதென மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஹோட்டல்களில் அறைகள் வழங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அதன் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களை, கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஹோட்டல்களுக்கு வரும் நபர்களின் அடையாளங்களை தெரியப்படுத்துவதற்காக சீசீடீவி கமரா பயன்படுத்துதல் மற்றும் ஊழியர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கும், தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவது கட்டாயமாகும் என இங்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

யாராவது இந்த கும்பல்களின் செயற்பாட்டிற்கு உதவினால் அவர்கள் அனைவரதும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.