பஸ் வண்டியுடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் படுகாயம்

Report Print Akni in சமூகம்
48Shares

மட்டக்களப்பு கரடியனாறு -செங்கலடி பிரதான வீதி பங்குடாவெளி சந்தியில் பஸ்வண்டியுடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு உறுகாமத்தில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி கரடியனாறு செங்கலடி வீதியில் பிரயாணித்த இலங்கை போக்குவரத்து பஸ்வண்டியுடன் பங்குடாவெளி பகுதியில் இருந்து பிரதான வீதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பஸ்வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டா சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.