யாழில் திலீபனின் நினைவு தூபிக்கு பொலிஸ் பாதுகாப்பு!

Report Print Murali Murali in சமூகம்
335Shares

தியாக தீபம் திலீனின் நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று (14) தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி முன்னால் பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்ற தடைக்கு எதிராக நாளை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,யாழ்ப்பாணம் - நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக வளாகப் பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்கள், நினைவு வளைவுகளைப் பொலிஸார் அகற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.