வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு நடத்திய வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர்

Report Print Theesan in சமூகம்

வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் வவுனியா மாவட்டங்களில் பொலிஸாரால் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கேட்டறிந்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் எடுக்க வேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும், பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, அவசர அழைப்பின்போது பொலிஸார் தாமதமாக குறித்த பகுதிக்கு வருகின்றமை மற்றும் வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் அதிவேகமான மோட்டார் சைக்கிள் செலுத்தப்படுகின்றமை,பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் தடுக்கப்பட வேண்டும், அதிகரித்த போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இதன்போது எடுத்துக்கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.