நேருக்கு நேர் இரு பேருந்துகள் மோதி விபத்து! பலர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்றுள்ள நிலையில் படுகாயங்களுக்கு இலக்கானவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு, 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்போது ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தும், பொகவந்தலாவையிலிருந்து ஹட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்தும் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.