நோயாளியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை கடிதத்தினை மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் மகனான பிச்சை குட்டி நஜீம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் எனது தந்தையை சுகயீனம் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவசரமாக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வைத்தியர் ஆலோசனை கூறியுள்ளார்.

அதன் பிரகாரம் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென சென்ற அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளானது.

இதனால் எனது தந்தையின் தலை அடிபட்டு மண்டையோடு பாதிக்கப்பட்டு மூளையின் ஒரு பகுதி சிதைவடைந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர் அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த எம். ஐ. பிச்சை குட்டி (56 வயது) எனவும் தெரியவருகின்றது.

கவனயீனமாக ஊழியர்கள் செயற்பட்டமையே தனது தந்தை மரணிப்பதற்கு காரணம் எனவும் உயிரிழந்தவரின் மகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரிடம் கடிதம் ஒன்றினையும் வழங்கியுள்ளார்.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 12. 9 .2020 சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் எனது தந்தையின் சுகயீனம் காரணமாக மூதூர் தளவைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவசரமாக திருவண்ணாமலை தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அதன் பிரகாரம் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதனால் எனது தந்தையின் தலை அடிபட்டு வாதிக்கப்பட்டு நூலின் ஒரு பகுதியை அடைந்தது.

அப்போது நோயாளிகள் கவனிக்க வேண்டுமே தவிர வேறு எவரும் குறித்த வாகனத்தில் வருகை தரவில்லை என்பதுடன் நோயாளியை இருக்கையில் பாதுகாப்பான முறையில் அமர்ந்தால் வாகனத்தினை மிக வேகமாக ஓட்டிச்சென்று அதனால் நோயாளியைப் பராமரிக்க வருகை தந்த ஊழியரின் கவனமும் விபத்துக்கு காரணம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமக்கள் தனக்கு ஏற்படும் நோயை குணப்படுத்த வைத்தியசாலைக்கு சமூகம் தருகின்றனர். தங்களை நம்பி வருகின்ற நோயாளிகளை சில ஊழியர்களின் கவனயீனத்தால் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

எனவே அசமந்தையாக செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.