மட்டக்களப்பில் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க தடை விதித்த நீதிமன்றம்

Report Print Navoj in சமூகம்

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை மட்டக்களப்பில் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளருக்கு பொலிஸார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த தியாகி திலீபனின் நினைவேந்தல் இன்று தொடக்கம் 26ஆம் திகதி வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்த நிகழ்வினை ஒழுங்கமைப்பு செய்யும் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

அந்தவகையில் மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் சுரேஸ் என்பவருக்கும் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.