மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை முதல் அமுலாகும் வகையில் பேருந்துகள் பயணிக்கும் பக்கமே மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயணிக்க வேண்டும்.

அதற்கமைய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் இடது பக்கமாக பயணிக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி ஒழுங்கை சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று ஆரம்பிக்கப்பட்ட சட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.