முதலையை இறைச்சிக்காக வெட்டிய ஏழு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முதலை ஒன்றினை இறைச்சிக்காக வெட்டிய சந்தேகத்தின் பேரில் ஏழு சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பகவடம் பகுதியைச் சேர்ந்த 32, 34, 38, வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.