ஈரட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஈரட்டை நவகம பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்ந பாரவூர்தி எதிரே வருகை தந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக ஈரட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.